Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 செப்டெம்பர் 01 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துக்கு சொந்தமான பால்போன் 9 (Falcon 9) என்ற ரொக்கெட் வரும் சனிக்கிழமை கென்னடி இருந்து செலுத்தப்படுகிறது. இந்த ரொக்கெட் அமோஸ் 6 என்ற செயற்கைக்கோளை சுமந்த செல்ல இருக்கிறது.
சனிக்கிழமை எந்த தடங்களும் இல்லாம் சரியாக பறப்பதற்காக பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி ரொக்கெட்டை நிலைநிறுத்தி அதன் என்ஜினை செயல்படுத்தி பார்த்தனர்.
அப்போது திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அத்துடன் அந்த பகுதி புகை மண்டலமாக மாறியது. இதனால் அருகில் உள்ளவர்கள் அச்சம் அடைந்தனர். பல மைல் தூரத்தில் உள்ள கட்டங்கள் கூட இந்த அதிர்வால் குலுங்கின. சில நிமிடங்களாக வெடித்துக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வியாழக்கிழமை ஆளில்லாத ராக்கெட்டை பரிசோதிக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டது. சனிக்கிழமை ரொக்கெட் ஏவப்படுவதற்கும் முன் இதுபோன்ற பரிசோதனைகள் வழக்கமாக நடைபெறுவதுதான் என்று தெரிவித்துள்ளது. இருந்தாலும் விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
33 minute ago
2 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
15 Aug 2025