2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

குப்பைகளை அகற்ற புதிய சட்டம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சந்துன் ஜயசேகர

குப்பைகளை அகற்றுதல், தினந்தோறும் கடலுக்குச் செல்லும் படகுகள் மற்றும் மீன்பிடி படகுகளில் இருந்து அகற்றப்படும் குப்பைகளால் கடல் நீர் மாசடைதல் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினைகளை தடுப்பதற்கு புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என்று மீன்பிடி பிரதியமைச்சர் திலுப் வெத்தாராச்சி நேற்று வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தார்.

கடலுக்கு மீன்பிடிக்காகச் செல்லும் மீனவர்கள் கொண்டுச் செல்லும் பொருட்கள் யாவை என்பது தொடர்பில் கணக்கு எடுக்கும் அதேவேளை, அவர்கள் கரைக்கும் திரும்பி வரும் போது, கொண்டுச் செல்லும் அனைத்து பொருட்களும் கொண்டுவரப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்தல் வேண்டும் என்று, கடற்றொழில் பணிப்பாளருக்கு  பிரதியமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இதனையும் மீறி, கொண்டுச் செல்லும் எந்தவொரு பொருளையும் கடலில் வீசும் மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கை கடற்பரப்புக்குட்பட்ட பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதற்காக ஒரு சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும்  அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X