2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சசிகலாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனு

Kanagaraj   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதலமைச்சராக சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் செந்தில்குமார்,  இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலாவை தலைவராக தேர்ந்தெடுத்து, அவரிடம் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில்; கர்நாடக அரசு தரப்பில் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி முறையிட்டபோது, தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பெங்களூரு கீழ்க்கோர்ட்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டபோது அ.தி.மு.க. தொண்டர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தற்போது அ.தி.மு.க. சார்பில் சசிகலாவை அவசர அடிப்படையில் முதலமைச்சராக பொறுப்பேற்க முயற்சிகள் எடுக்கும் நிலையில், அவர் பொறுப்பேற்ற ஒரு வாரத்துக்குள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் மீண்டும் ஒருமுறை வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கைக்கு ஊறுவிளைவிக்கும் ஆபத்து உள்ளது.

எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்படும் வரை சசிகலாவுக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X