2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சட்டத்தரணிகளான பொலிஸ் அதிகாரிகள்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேர் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகர், பிரதான ​பொலிஸ் பரிசோதகர், மூன்று பொலிஸ் பரிசோதகர்கள், ஒரு உதவிப் பொலிஸ் பரிசோதகர்  மற்றும் ஒரு பெண் உதவி பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் அடங்குவர்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.சி.சானக டி சில்வா (குற்றப் புலனாய்வுத் திணைக்களம்) பிரதான பொலிஸ் பரிசோதகர் சிதாரா சஞ்சய் பெரேரா (களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரி), பொலிஸ் பரிசோதகர் பி.கே.ஆர்.எம்., வசந்தகுமார (சட்டப் பிரிவு), பொலிஸ் பரிசோதகர் எஸ். டபிள்யூ ஏபிஆர் சமரவிக்ரம (சட்டப் பிரிவு), பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ ஜிபி குமாரசிங்க (மத்திய மாகாண சட்டப்பிரிவு), பொலிஸ் பரிசோதகர் பிஎம்சி சண்டருவன் (சட்டப் பிரிவு), உப பொலிஸ் பரிசோதகர் எம்.டி.சி.ஜெயமினி (வடமேல் மாகாண சட்டப் பிரிவு) ஆகியோரே இவ்வாறு சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டவர்களாவர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X