Editorial / 2019 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதை வர்த்தகர்களுக்கு எதிரான சட்டத்தை, கடுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியமென, அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகள் ஏதாவது அழுத்தம் விடுக்கும் போது, வெவ்வேறு நபர்கள் முதுகெழும்பை நேராக நிமிர்த்தி பதிலளிப்பதற்கு பதிலாக, இரண்டாக மூன்றாக வளைந்து மண்டியிட்டு நாட்டைக் காட்டிக்கொடுப்பதாகத் தெரிவித்தார்.
நேற்று (28) மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தான் கொள்கை ரீதியில் மரணத் தண்டனைக்கு எதிரானவன் எனினும் போதை வர்த்தகர்கள் சிறைக்குள் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் போதைப் பொருள் வர்த்தகம் அதிகரிக்கின்றது. எமது நாட்டில் பல இலட்ச குழந்தைகளைப் போதைப் பொருள் பலியெடுக்கின்றதென்றால், நாமும் போதை வர்த்தகர்களுக்கெதிரான சட்டநடவடிக்கையை கடுமையாக்குவது தொடர்பில் சிந்திக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
30 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026