Freelancer / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வுகள் இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என்று பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பரவுவதன் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் தொடர்வது ஆபத்தானது என்று சுகாதார பிரிவு அதிகாரிகள் பாராளுமன்ற பிரதானிகளுக்குத் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டம் வியாழக்கிழமை (02) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற உள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற சபையின் கடைசி கூட்டத் தொடரின் போது எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், நிலையியற் கட்டளைகளின்படி, அந்த நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு சபை கூட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கூட்டத்தை எம்.பி.க்களின் கேள்விகளைக் கேட்பதற்காக ஒதுக்கி வைக்க கட்சித் தலைவர்கள் முடிவு முன்னரே முடிவு செய்திருந்தனர்.
பாராளுமன்ற பணியாட் தொகுதியினரில் கொரோனா தொற்றுக்குள்ளான இருபது பேர் சமீப காலங்களில் அவ்வப்போது கண்டறியப்பட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago