2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சபை இன்றும் கூடுகின்றது: ஒருநாள் செலவு ரூ.25.3 மில்லியன்

Editorial   / 2018 நவம்பர் 19 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவையடுத்து, நாடாளுமன்றம் கடந்த 14ஆம் திகதி கூடப்பட்டது. அன்றுமுதல், தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நாடாளுமன்றத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டது. இரண்டு நாள்கள் இடைவெளிக்குப் பின்னர், நாடாளுமன்றம் இன்று (19) மீண்டும் கூடவிருக்கின்றது.  

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடும். களேபரம் ஏற்பட்ட நாள்களில், நாடாளுமன்றத்தின் சொத்துகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் கூடும்போது, நாளொன்றுக்கு ஏற்படும் செலவு ரூ.25.3 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த வருடத்தில் 95 நாள்கள் சபை அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதற்காக, 2,450 மில்லியன் ரூபாய்க்கும் கூடுதலான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது என தகவலறியும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .