2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சமபோஷ பக்கெட்டை திருடியவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Freelancer   / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் வீட்டிலிருந்த சமபோஷ பக்கெட்டை திருடிய குற்றச்சாட்டில் 51 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கோட்டை நீதவான் திலின கமகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர்கள் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை, அவர்கள் 22 முதல் 29 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்கின்றமை மற்றும் விசாரணை ஓரளவு முன்னெடுக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல விடயங்களை கருத்திற்கொண்டு பிணை வழங்க தீர்மானித்ததாக நீதவான் கூறியுள்ளார்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X