2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

’சுற்றாடல் மரபுரிமையை பாதுகாப்பது தேசிய பொறுப்பாகும்’

Freelancer   / 2026 மார்ச் 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ், இந்நாட்டின் தேசிய மரபுரிமைகளை இனங்காணல், பாதுகாத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கும் நோக்கில், முதன்முறையாக தேசிய நாமல் உயனவை 'இலங்கையின் தேசிய மரபுரிமையாக' பிரகடனப்படுத்தும் நிகழ்வும், அதன் 35 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அநுராதபுர மாவட்டத்தின் பலாகல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 602 ஹெக்டெயார் பரப்பளவைக் கொண்ட தேசிய நாமல் உயன, தேசிய, சமய, சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ரீதியாகப் பல பெறுமதிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான இடமாகும். இதன் நிறுவனர் வண, வனவாசி ராகுல தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க, புத்தசாசன அமைச்சின் தலையீட்டுடன் இது தேசிய மரபுரிமையாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடையாளப்படுத்தும் பெயர்ப் பலகையை ஜனாதிபதி இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாகத் திறந்து வைத்தார்.

இந்த தனித்துவமான சுற்றாடல் மரபுரிமையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டிய தேசியப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

ஆரம்பம் முதல் இன்று வரை நாமல் உயனவைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்ய வனவாசி ராகுல தேரர் ஆற்றிய அர்ப்பணிப்பை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் பாராட்டினார்.

நாமல் உயனவின் 35 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் தபால் உறை, 'தேசிய நாமல் உயன கல்விச் சஞ்சிகை' ஆகியவற்றை வனவாசி ராகுல தேரர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வு தற்போதைய அரசாங்கம் செய்த மிகச்சிறந்த சுற்றுச்சூழல் சேவையாக வரலாற்றில் இடம்பெறும் என இங்கு விசேட அனுசாசனை உரை நிகழ்த்திய நாமல் உயனவின் நிறுவனர் வண, வனவாசி ராகுல தேரர் குறிப்பிட்டார்.

இந்தத் நிகழ்வு இன்று தேசிய நாமல் உயனவில் நடைபெறவிருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதனை ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவை மிகவும் பாராட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் உள்ள தேவையை இந்நாட்டு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அனைவரையும் ஒன்றிணைத்து தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்குத் தீர்வுகளைக் காண வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .