Editorial / 2026 மே 03 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுமனசிறி குணதிலக்க
பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுல்வெல பகுதியில், 13 வயதுடைய சிறுவன் ஒருவனுக்குப் பாரதூரமான பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் இரு பிள்ளைகளின் தந்தையான கடை ஊழியர் ஒருவர் கடந்த 2ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் கணுல்வெல பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி பயின்று வருகின்றார். இச்சிறுவன் கடந்த 2ஆம் திகதி அப்பகுதியிலுள்ள கடை ஒன்றிற்குப் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.
இதன்போது, அக்கடையில் ஊழியராகப் பணிபுரியும் காத்தான்குடியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர், அச்சிறுவனைக் கடையின் உட்புற அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சம்பவம் குறித்துச் சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் பிபிலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவப் பரிசோதனைக்காகப் பிபிலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரைப் பிபிலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. பிபிலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரவீர ஜயலத் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .