Editorial / 2025 செப்டெம்பர் 08 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

15 வயதும் 4 மாதங்களேயான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் படல்கும்பர அலுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த சிறுமி, தாய் மற்றும் தந்தையுடன் கோபித்துக் கொண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதியன்று களனி பிரதேசத்தில் உள்ள தன்னுடைய அக்காவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். தன்னுடைய இளைய மகளை காணவில்லை என தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியை அழைத்து வந்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.
வைத்திய பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அச்சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
அச்சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், தான் அலுப்பொத்த பிரதேசத்தில் இளைஞனுடன் காதல் வயப்பட்டிருந்தேன்.
அவருடன் பிப்ரவரி 28ஆம் திகதி பெரியப்பாவின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு பெரியப்பாவின் மகள் மட்டுமே இருந்தாள். சிறுதி நேரத்தில் காதலன் அந்த வீட்டுக்கு வந்தார்.
அதன்பின்னர், பெரியப்பாவின் மகளின் அறையில், காதலனுடன் கணவன் மனைவியாக இருந்தேன் என்று அச்சிறுமி, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தாங்கிக்கொள்ள முடியாமையால் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காதலனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக படல்கும்பர பொலிஸார் தெரிவித்தனர்.
11 minute ago
16 minute ago
31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
31 minute ago
39 minute ago