2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சுய இன்பத்தில் ஈடுபட்ட 60 வயதான நபருக்கு சிறை

Editorial   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுய இன்பத்தில் ஈடுபட்ட 60 வயதான நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் சுய இன்பத்தில் ஈடுபட்ட 60 வயது நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே உள்ள தையல் கடைக்கு சென்றுள்ளான். அப்போது 60 வயது நபர் ஒருவர் தனக்கு சொந்தமான தையல் கடையில் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.  மேலும் அச்சிறுவனிடன் தனது அந்தரங்க உறுப்பையும் அந்த நபர் காட்டியிருக்கிறார். 60 வயது நபரின் பாதக செயலை அச்சிறுவன் பார்த்து அதிர்ந்துள்ளான்.

அதனை பார்த்து அதிர்ச்சி அடைத்த சிறுவன் வீட்டிற்கு சென்று தனது பெற்றோர்களிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளான். இதையடுத்து சிறுவனின் குடும்பத்தார் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மற்றவர் பார்வைக்கு படும்படியாக பொது வெளியில் சுய இன்பத்தில் ஈடுபடுவது பாலியல் குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளார்.

பலர் வந்து செல்லும் பகுதியில் உள்ள தனது கடையில் இவ்வாறு நடந்து கொண்டது பாலியல் குற்றம். எனவே, இது போன்ற செயல்பாடுகள் பாதிக்கப்பட்ட சிறுவன், அவரது குடும்பம், ஏன் சுற்றி இருக்கும் சமூகம் என அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அவன் எதிர்கொண்ட சம்பவம் மனதில் ஆழமான வடுவாய் பதிந்துவிடும்.


குழந்தைகளுக்கு இவை நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சம்பவம் குழந்தைகள் பொதுவெளியில் பாதுகாப்பாக நடமாட முடியாது என்ற அச்சத்தை சமூகத்தில் உருவாக்கிவிடும். எனவே சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை   வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X