2026 மே 04, திங்கட்கிழமை

சுற்றாடல் சட்டத்தில் திருத்தம்

R.Maheshwary   / 2021 மார்ச் 28 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றாடல் சட்டத்தை திருத்தம் செய்ய சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1980ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சுற்றாடல் சட்டமே தற்போது வரை செயற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் காலாவதி ஆகியுள்ளதென்றும் அவற்றை சரியான நேரத்தில்  திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்; தெரிவித்துள்ளார்.

எனவே, எதிர்வரும் 3 மாதங்களில் இச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களிடம் அறவிடும் தண்டப்பணத்தில் திருத்தம் செய்து, ஒரு இலட்சம் வரை அபராதத் தொகையை அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .