2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சைட்டம் நிறைவேற்று அதிகாரியின் வாகனத்துக்கு சூடு

Thipaan   / 2017 பெப்ரவரி 06 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தின் (சைட்டம்) பிரதான நிறைவேற்று அதிகாரியான டொக்டர் சமீர சேனாரத்னவின் வாகனத்துக்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்த இருவரால், சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் வைத்தே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதில், அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சைட்டம் நிறுவன பிரதான கட்டடத்திலிருந்து சுமார் 700 மீற்றருக்கு அப்பால் உள்ள சந்திரிகா குமாரதுங்க மாவத்தைக்கு அண்மையில் வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

துப்பாக்கிப் பிரயோகத்தில் அவருடைய காரின், முன்பக்கத்தையும் பின்பக்கத்தில் வலதுபக்கத்தில் உள்ள கதவையும் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்துச் சென்றுள்ளன. காரின் மீது துப்பாக்கிப் பிரயோகங்கள் நான்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

பிரதான நிறைவேற்று அதிகாரியான டொக்டர் சமீர சேனாரத்ன, தன்னுடைய கடமைகளை முடித்துகொண்டு, ராஜகிரியவில் உள்ள தன்னுடைய வீட்டைநோக்கிப் பயணித்துகொண்டிருந்த போதே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X