2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் பரவும் அபாயம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய தொழுநோய் ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் அதிகளவிலான சிறுவர்கள் தொழுநோயால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 140க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தொழுநோயால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரத்ன கூறினார்.

இதனால், சிறுவர்களின் சருமத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

தொழுநோயால் பீடிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும் டொக்டர் பிரியந்த கருணாரத்ன குறிப்பிட்டார்.

கடந்த வருடம் இலங்கையில் 1,853 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 42 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலும் 15 வீதமானவர்கள் தென் மாகாணத்திலும் அடையாளம் காணப்பட்டதாக தேசிய தொழுநோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X