Freelancer / 2026 ஏப்ரல் 12 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘ஜனநாயகன்’ லீக் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் மும்பை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சினிமா தணிக்கை வாரியம் கசியவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது தவறாக வழிநடத்தும் குற்றச்சாட்டு. தணிக்கை வாரியம் கே.டி.எம். என்ற பாதுகாப்பு முறையை பின்பற்றுகிறது.
இந்த கேடிஎம் கடவுச் சொல் சினிமா தயாரிப்பாளரிடம் மட்டுமே இருக்கும். இந்த கடவுச் சொல் இல்லாமல் யாரும் படத்தை பார்க்க முடியாது. ஜனநாயகன் படத்தின் டி.சி.பி. (டிஜிட்டல் சினிமா தொகுப்பு) விண்ணப்பதாரரிடம் உரிய ஒப்புதலுடன் கடந்த 17ஆம் திகதி மும்பையில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் அந்த நகல் அவர்களிடம்தான் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. (a)
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago