R.Maheshwary / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாட்டில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலையிடவில்லை எனத் தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே, இதில் எவ்வித அரசியல் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் அதிகாரத்தினால் பாதிப்பட்ட அரச சேவையாளர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்றார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளில், ஜனாதிபதியின் தலையீடு காணப்பட்டதாக எதிர்த் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய, 2019ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் குறைகேள் அதிகாரி ( ஒம்புட்ஷ்மன்) காரியாலயம் நிறுவப்பட்டது” என்றார்.
“நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்து பலதரப்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அவ்வாணைக்குழு, எவ்வித அரசியல் அழுத்தங்களுமின்றி விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
“அரசாங்கத்துக்கு இன்னும் சிறிய ஆயுள் காலமே உள்ளதென, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எமது பலத்தை, மாகாணசபைத் தேர்தல் நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .