Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 20 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைவரும் தங்கள் அனைத்து சிவில் - அரசியல் - கலாசார உரிமைகளையும் தடையின்றி அனுபவிக்கக்கூடிய அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் ன்று தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
உலகெங்கிலும் வாழும் இந்து மக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகின்றது.
கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவு கூர்ந்து, அதர்மத்தைத் தோற்கடித்து அநீதியை வென்றது போன்று அனைவரின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையை தாங்கி அவர்கள் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்தக் கொண்டாட்டம் தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதை குறிக்கின்றது. தற்போது நம் முன்பாக உள்ள பெரும் சவால் போன்றே நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் போதைப்பொருள், மறைந்துள்ள குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும் அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும்.
அனைத்து மதவாத, இனவாத சக்திகளையும் தோற்கடித்து சமூக நீதியை நிலைநாட்டவும் அனைவரும் தங்கள் அனைத்து சிவில் - அரசியல் - கலாசார உரிமைகளையும் தடையின்றி அனுபவிக்கக்கூடிய அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்பதை இதன் மூலம் வலியுறுத்துகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். (a)
15 minute ago
28 minute ago
37 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
37 minute ago
48 minute ago