2025 ஜூலை 09, புதன்கிழமை

ஜனாதிபதி, பிரதமருடன் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டக், ஜனாதிபதி  கோதபய ராஜபக்‌ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை (24) அவர்களது  அலுவலகங்களில் சந்தித்து கலந்துரையாடினார். 

 

இதன்போது,   இரு நாடுகளுக்கிடையிலான உறவானது  நீண்டதும் ,பழமையானதுமாக காணப்படுவதோடு, அனைத்து துறைகளிலும் அந்த உறவு வலுவடைந்து காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு,  இலங்கை மாணவர்களுக்கான பாகிஸ்தான் உயர் கல்வி ஆணையம் வழங்கும்  சுமார் 1000 புலமைப்பரிசில்களையும் நினைவூட்டிய அவர்,  பாகிஸ்தான் எப்போதும் இலங்கையின் பக்கமான நிற்கும் என்றும் ​தெரிவித்துள்ளார்.   

குறிப்பாக, பாதுகாப்பு, உளவுத்துறை பகிர்வு, போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல், அனைத்து வகையான தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேவையான எந்த ஆதரவையும் வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு பாகிஸ்தானின் உதவி  தேவைப்படும் போதெல்லாம் நன்றியுடன் பாகிஸ்தான் உதவியுள்ளதென​ தெரிவித்துள்ள அவர்,  இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திகொள்வது அவசியம் என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .