Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2025 ஜூலை 08 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்யலாம் என கூறி இளம்பெண்ணிடம் அத்துமீரிய மதபோதகரை பொலிஸார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஆனால் அந்த பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்த அந்த பெண் வேண்டாத கோவில்கள் இல்லை .இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
அப்போது உறவினர்கள் கூறியதன் அடிப்படையில் மேக்காமண்டபம் பாண்டிவிளை பகுதியில் உள்ள ஒரு சபைக்கு சென்றுள்ளார் அந்த பெண் . அங்கு 43 வயதான ரெஜிமோன் என்பவர் சபை போதகராக இருந்தார். அவர், இளம்பெண்ணின் நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய பெற்றோர், மகளை மட்டும் ஜெபம் செய்யும் அறைக்கு அனுப்பி உள்ளனர். அந்த சமயத்தில் போதகர் ரெஜிமோன், பெண்ணின் அழகில் மயங்கி ஜெபம் செய்வதை மறந்து அந்த பெண்ணை திடீரென கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
மதபோதகரின் அத்துமீறிய செயலை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போதகரின் பிடியில் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்துள்ளார். பிறகு நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூற, அவர்களும் வெகுண்டெழுந்தனர். அதே சமயத்தில் கோபத்தை தணித்துக் கொண்டு முறைப்படி தக்கலை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பொலிஸ் வழக்குப்பதிவு செய்து ரெஜிமோனை கைது செய்தனர்.
மேலும் இதுபோன்று அவர் வேறு பெண்களிடம் அத்துமீறியுள்ளாரா? என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
8 hours ago