2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஜப்பான் பயணமாகும் ஜனாதிபதி ரணில்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளார்.

ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.

ஜப்பானுக்கான விஜயத்தின் பின்னர் பிலிப்பைன்ஸ் செல்லும் ஜனாதிபதி, அங்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்போங் மார்கோஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது, ​​எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X