Editorial / 2021 மார்ச் 28 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெனீவா அழுத்தங்களுக்கு பயமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சுதந்திர நாடான இலங்கையால் ஜெனீவா அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தனியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (27) மாத்தறையில் நடைபெற்ற கிராமத்துடன் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியப் பெருங்கடலின் அதிகாரப் போராட்டத்துக்கு பலியாகமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் ஜெனீவா யோசனைக்கு இணை அனுசரணை வழங்கி, நாட்டின் இறையாண்மையை இல்லாமல் செய்ததாகவும் தற்போதைய அரசாங்கம் அந்த அனுசரணையிலிருந்து விலகியதால், ஜெனீவா இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிகாரப் பிரிவினை என்று கூறி, மீண்டும் பிரிவினைவாதத்தைக் கொண்டு வந்து, நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க தயாரில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
18 minute ago
32 minute ago
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
32 minute ago
42 minute ago
47 minute ago