2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஜெயாவின் மரணத்தை ஆராய்வதற்கு விசாரணை ஆணையம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் மரணம் குறித்து பரவலாக கேள்விகள் உள்ளன. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உலகத்துக்கு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனது அரசு இல்லத்தில் செய்தியாளர்களை, நேற்றுக் காலை சந்தித்தார்.  

இதன்போது, சசிகலாவின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது ஜெயாவுக்கு, வைத்தியசாலையில் என்னதான் நடந்தது என்று கூறமுடியுமா என செய்தியாளர் கேட்டார். 

அதற்கு பதிலளிக்கும் போதே விசாரணை ஆணையம் தொடர்பில் கருத்துரைத்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X