2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

டவுசர் திருடர்கள் இருவர் சிக்கினர்

George   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான நீளக்காற்சட்டைகளை திருடிய சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொஸ்கொட ஆடைதொழிற்சாலையில் இருந்தே இந்த நீளக்காற்சட்டைகளை அவர்கள் களவாடியுள்ளனர்.

மிகுவும் நுட்பமான முறையில் இவர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குப்பைகளை கொண்டு செல்லும் பெட்டிகளில் அடைத்து இவர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

நீளக்காற்சட்டைகளை மறைத்துவைத்த விற்பனை நிலையத்தை சோதனையிட அம்பலாங்கொடை நகரத்துக்கு பொலிஸார் சென்றபோது, சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

எனினும், சந்தேகநபர்களை பொலிஸார் மீண்டும் கைதுசெய்ததுடன் அதன்போது பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .