2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

Editorial   / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

  3 வயது சிறுமியை டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்த 65 வயதான முதியவருக்கு போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்பளித்துயுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரில் சாலர்புல் கிராமம் பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுமியை மேற்கு வங்காள பகுதியைச் சேர்ந்த 65 வயதான   முதியவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல்  பாலியல் வன்கொடுமை செயலில் ஈடுபட்டதாகத் தொடர்ந்த வழக்கில் தற்போது சூரஜ்பூர் மாவட்ட நீதிமன்றம் அந்த முதியவருக்கு ஆயுள் தண்டனை அளித்துத் தீர்ப்பளித்துள்ளது.

நொய்டாவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு   2019 ஆண்டில் வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியைச் சாப்பிடுவதற்கு இனிப்பு கொடுப்பது போல் கொடுத்து சிறுமியை யாரும் இல்லாத போது வீட்டிற்குள் அழைத்துச் சென்று இந்த செயலை செய்துள்ளார்.

சிறுமி அழுதுகொண்டே இதனைப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே சிறுமியின் பெற்றோர் முதியவர் மேல் பொலிஸ்  நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் கைதுசெய்யப்பட்ட முதியவருக்கு தற்போது நீதிபதி அனில் குமார் சிங், ஆதாரம் மற்றும் 8 சாட்சிகள் அடிப்படையில் முதல் முறை இந்த செயலை போக்சோ வழக்கில் டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்று குறிப்பிட்டு அவருக்கு ஆயுள் தண்டனை அளித்துள்ளது.

   டிஜிட்டல் பாலியல் கொடுமை என்றால் டிஜிட்டல் முறையில் தகாத செயல்களில் ஈடுபடுவது அல்லது சைபர் கிரைம் கிடையாது. டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்பது ஒருவரின் அந்தரங்க உறுப்பில் சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி கை மற்றும் கால் விரல்களை நுழைப்பது. ஆங்கிலத்தில் டிஜிட் என்பது விரல்களைக் குறிக்கிறது.

2012ம் ஆண்டு முன்பு வரை இந்த செயலுக்குக் பாலியல் வன்கொடுமை என்ற வார்த்தை கிடையாது. இதனை மோளேஸ்டேஷன் அதாவது கைகளால் அடுத்தவரின் தனிப்பட்ட உறுப்புகளைத் தடவுவது என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.

2013ம் ஆண்டில் புதுடெல்லியில் நடந்த கொடூர பாலியல் சம்பவமான நிர்பயா கற்பழிப்பு வழக்கு பின் இந்த டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்ற வார்த்தை இந்தியாவின் பாலியல் பலாத்காரம் சட்டத்தில் பாலியல் குற்றம் என்று சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிலர் கைதுசெய்யப்பட்ட போதிலும் இந்த தீர்ப்பே டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை கொடுத்த முதல் வழக்கு ஆகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X