2025 ஜூலை 09, புதன்கிழமை

டின் மீன் இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல்

Editorial   / 2020 பெப்ரவரி 18 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (18) நடைபெறவுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

தற்போது உள்ள இறக்குமதி விதிகளுக்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள், இலங்கை தரநிர்ணய நிறுவனம் மற்றும் சுகதார அமைச்சு ஆகியவை கண்காணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .