2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

டீசலின் உற்பத்தி வரி அதிகரிப்பு

George   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீசல் லீற்றர் ஒன்றுக்கான உற்பத்திவரி 10 ரூபாயால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த வரி அதிகரிப்பு ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி புதிய வரியாக டீசல் லீற்றர் ஒன்றுக்கு 13 ரூபாய் அறவிடப்படும்.

இந்த புதிய வரி அதிகரிப்பு காரணமாக சந்தையில் உள்ள டீசல் விலை அதிகரிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அதன் பயனை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் டீசலின் உற்பத்திவரி 10 ரூபாயால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X