2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ட்ரோன் விழுந்தது; இயக்கியவர் கைது

Niroshini   / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், ருவன்வெலிசாய புனித பூமிக்குள் ட்ரோன் கமெராவைச் செலுத்தி, அதனை தூபியின் மீது விழச்செய்து தூபிக்குச் சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் ஒருவரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.   

அங்கு, கடந்த சனிக்கிழமையன்று இரவு 7 மணிக்கு விசேட பூஜையான ‘கப்ருகா பூஜை’ வழிபாடுகள் இடம்பெற்றிருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று, அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே ட்ரோன் கமெரா, தூபியின் மீது விழுந்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்து.   

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர், கொழும்பிலிருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் வீடியோ படப்பிடிப்பாளராகக் கடமையாற்றுகின்றார். இவர், அந்த புனித பூமிக்குள், டிரோன் கமெராவை பயன்படுத்துவதற்கு எந்தவிதமான முன்அனுமதியையும் பெற்றிருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.   

டிரோன் கமெராவை பயன்படுத்தும் போது, அவற்றுக்கு முன் அனுமதியை பெறவேண்டும் என்று, பொலிஸ் திணைக்களம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. இதேவேளை, சில கட்டுப்பாடுகளை விதித்து, அரசாங்கத் தகவல் திணைக்களமும், விசேட அறிக்கையொன்றையும் விடுத்திருந்தது.   

அநுராதபுரம் புனித பூமிக்குள் டிரோன் கமெராவை இயக்கவேண்டுமாயின், அதற்கு அட்டமாஸ்தானாதிபதியிடம் விசேட அனுமதியை பெற்றிருக்கவேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.   

நுகேகொடையை வதிவிடமாகக் கொண்ட, குறித்த சந்தேகநபர், அரசாங்கத் தகவல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட, ஊடக அனுமதிக்கான அடையாள அட்டையைக் காண்பிப்பதற்கு தவறிவிட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.   

இதேவேளை, தூபிக்கு சேதத்தை விளைவித்தமை தொடர்பில் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம், விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .