2026 மே 04, திங்கட்கிழமை

’தடுப்பூசி ஏற்றிக்கொண்டோர் கொஞ்சம் கவனிக்கவும்’

R.Maheshwary   / 2021 மார்ச் 31 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி 29ஆம் திகதி, கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி, ஏப்ரல் 19ஆம் திகதி முதல் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சரான வைத்தியர்  சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே,  இதற்காக, ஒருதொகை தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார். 

கொழும்பில்இ நேற்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 'ஜனவரி 29 ஆம் திகதி கொவிட்-19  தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது' என்றார். .

'இந்தியாவில் இருந்தும் ஒரு தொகுதி தடுப்பூசி கிடைக்கவுள்ளது. மார்ச் 31 ஆம் திகதி கிடைக்கும் தடுப்பூசிகள் தொகை போதுமானது. ரஷ்யாவின் ஸ்புட்டிங் தடுப்பூசியை பெறவும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை பெறுவதில் சிரமம் உள்ளது. எனினும், இலங்கையில் கூடிய சனத் தொகை இல்லாமையால் பிரச்சினையில்லை' இஎனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .