S. Shivany / 2020 நவம்பர் 18 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த, 58 வயதுடைய பெண் மரணமடைந்துள்ள நிலையில, அப் பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, மரண விசாரணை அதிகாரி க. ஹரிப்பிரசாத் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா மறவன்குளத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் இரண்டு பிள்ளைகள், கொழும்பு பகுதியில் இருந்து, கடந்த 9 ஆம் திகதி வருகை தந்த நிலையில் குறித்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தாயார் உடல்நலக்குறைவால் மரணித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மரண விசாரணையின்போது, குறித்த பெண் மற்றும் அவரது பிள்ளைகள் தனிமைபப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், வவுனியா வைத்தியசாலைக்கு கடந்த 12 ஆம் திகதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குறித்த பெண் சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இப்பெண் மரணித்தமைக்கான காரணத்தினை அறிந்துகொள்வதற்காக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவரது உடலில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோனைக்கு அனுப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவரது இரு பிள்ளைகளுக்கும் மரணித்தவரின் பேரனுக்கும், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
எனினும் இறந்த பெண்ணின் சடலம் உடனடியாக தகனம் செய்யப்பட்டுள்ளதுடன் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே, மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
2 minute ago
12 minute ago
17 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
17 minute ago
32 minute ago