2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தனியார் மயமாகும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

Freelancer   / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1,250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் தனியாருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களை தனியாருக்கு வழங்குவதற்கான வேலைதிட்டத்தின் மீளாய்வு கூட்டத்தின் போதே அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களைின் கட்டுப்பாட்டினை பெற்றுக்கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், எரிபொருளை விநியோகிப்பதற்கும், எரிபொருளை விற்பனை செய்வதற்கும் அதிகாரங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபத்தின் எரிபொருள் நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்திற்கு அமைய இதுவரை 24 நிறுவனங்களிடமிருந்து கேள்வி பத்திரத்துக்கான இணக்க மனு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X