2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தனியார் பஸ்களுக்கான நேர நிர்ணயம் அவசியம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ்கள் மெதுவாகப் பயணிக்கின்றமையினால், வீதிகளில் வாகன நெரிசல் அதிகரிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை பயணிகள் உரிமை அமைப்பு, பஸ்கள் பயணிப்பதற்கான நேரமொன்றை நிர்ணயிக்குமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம், கோரிக்கை விடுத்துள்ளது.

அது தொடர்பில், அவ்வமைப்பின் தலைவர் சுனில் ஜனசிங்க, மேலும் கூறியுள்ளதாவது,

வீதிகள் பல புனரமைக்கப்பட்டுள்ள நிலையிலும், சேவை நோக்கில் செயற்படாது இலாப நோக்கில் மாத்திரம் செயற்படும் தனியார் பஸ் ஓட்டுநர்களின் இவ்வாறான நடவடிக்கைகளால், பயணிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன.

இதனால், பிரதான மற்றும் புறநகரங்களில் பயணிக்கும் பயணிக்கும் பஸ்களுக்கு, மணித்தியாலத்துக்கு 8 - 10 கிலோமீற்றர் என்ற ரீதியில் நேரத்தை வரையறுத்துக் கொடுத்தால், சிறப்பாக இருக்கும்.

பஸ் ஓட்டுநர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக, தனியார் பஸ்களில் பயணித்து வந்த பயணிகள், தங்களது சொந்த வாகனங்களில் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த நடைமுறையை மாற்ற வேண்டுமாயின், தனியார் பஸ்களுக்கு, நேர நிர்ணயத்தை விதித்தல் கட்டாயமாக மேற்கொள்ளப்படல் வேண்டும். குறித்த காலத்துக்குள் பயணத்தை முடிக்காத பஸ்களுக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்” என்று, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அவர் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X