Freelancer / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நடந்ததைப் போல தமிழகத்திலும் இனப் படுகொலை நடக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காடுகளில் மேய்ச்சல் உரிமை கோரி தேனி மாவட்டம் போடி முந்தல் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக ஏராளமான நாட்டு மாடுகள் அழைத்து வரப்பட்டன. இருப்பினும் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயல்கின்றனர் என கூறி சீமானை பொலிஸ் மற்றும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் நடந்ததைப் போல தமிழகத்திலும் இனப் படுகொலை நடக்கிறது. இலங்கையில் குண்டுகளை வீசி இனப் படுகொலை செய்தனர். ஆனால் தமிழகத்தில் மது குடிக்க வைத்து இனப் படுகொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் நடந்ததும், தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதும் ஒன்றுதான். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் தொடர்ந்து லட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நாட்டை உலகத்தின் தலை சிறந்த நாடாக, பூமியின் சொர்க்கமாக மாற்றி படைப்போம். 5 ஆண்டுகளில் சிறந்த மாநிலமாக மாற்றுவேன். அவ்வளவு திட்டங்கள், சிந்தனைகள், கனவுகள் எங்களிடம் உள்ளன என்று தெரிவித்தார். (a)
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026