Ilango Bharathy / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
வரவு -செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைக்கும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் தெரிவித்தது.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு புறக்கணிக்கப்பட்டு உள்ளமையானது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியெனவும்,
தமிழ் மக்களுக்கு இதனூடாக எதிர்க்கட்சி தலைவர் சஜித், அநீதி இழைத்துள்ளதாகவும்
ஆளுந்தரப்பினரும் குற்றஞ்சுமத்தினர்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (07) அமர்வில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தை ஆரம்பித்து வைக்கும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களின் பெயர் பட்டியலை சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் கையளித்துள்ளார்.
இந்த பட்டியிலில் 33 எம்.பிக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் கூட்டமைப்பின் எம்.பிகள் பெயர்கள் இதில் உள்வாங்கப்படவில்லை. கூட்டமைப்புக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இல்லை. எனவே எமது மக்கள் சார்ந்தப் பிரச்சினைகளை பாராளுமன்றத்திலேயே பேச வேண்டும் எனவும் கூறினார்.
நியாயமான விடயத்தை சார்ள்ஸ் எம்.பி முன்வைத்துள்ளதாகக் கூறிய ஆளுந்தரப்பினர்,
கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களை பிரதிநித்துவம் செய்யக்கூடிய கட்சி. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களு்ககு பெரும் அநீதியை சஜித் செய்துள்ளார் என்றனர். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு அதிகளவில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராகத்தான் சஜித் செயற்படுகிறார் எனவும் ஆளுந்தரப்பினர் சபையில் தெரிவித்தனர்.
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago