Freelancer / 2024 ஜனவரி 23 , பி.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா, ஹேனேகம பிரதேசத்திலுள்ள விகாரையின் கலபாலுவாவே தம்மரத்ன தேரர் (45) மீது சொகுசு காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிழந்தார்.
சொகுசு காரில் வந்த இனந்தெரியாத நால்வர், தாம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் எனவும் தமக்குக் கிடைத்த தகவலின் பேரில் சோதனையிட வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் சோதனையிடுவது போன்று நடித்து இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கலபாலுவாவே தம்மரதன தேரரின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கொகுசு கார் எரியூட்டப்பட்ட நிலையில், நவகமுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. R
5 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago