Freelancer / 2026 ஜனவரி 17 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ஜெயச்சந்திரன் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 12ஆம் திகதி கொக்கத்தடி மூலம் தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்கியுள்ளார். இதன்போது தோங்காய் அவரது தலை மீது விழுந்துள்ளது.
இந்நிலையில் அவர் தனது மனைவியிடம் விடயத்தை கூறியுள்ளார்.
அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இதன்போது அவர் மயக்கமுற்றுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார். (a)
1 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026