Editorial / 2019 நவம்பர் 06 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்காலை நகரசபையின் முன்னாள் தவிசாளர் அணில் செல்லாஹென்நெத்தியை, நவம்பர் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, தங்காலை நீதவான் லிலந்த டிலான் வருஷவிதான இன்று(06) உத்தரவிட்டுள்ளார்.
தங்காலை நகரசபைக்குச் சொந்தமான 670,000 ரூபாய் பெறுமதியான தீயணைப்பு உபகரணத் தொகுதியை நகரசபைக்கு கையளிக்காமை, 2013 ஆம் ஆண்டு, தங்காலை நகரசபை முன்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட உபகரணத் தொகுதியை மறைத்து வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பில், கடந்த மாதம் 24 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இவர், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
38 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
1 hours ago