2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி பொத்துவிலில்

Freelancer   / 2022 செப்டெம்பர் 16 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

விடுதலைப் புலிகளின் மாவீரன் தீயாக தீபம் திலீபனின் 35ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் - நல்லூர் கோவில் வரையான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி, பொத்துவில் நகரில் இருந்து நேற்று (15) ஆரம்பமாகி இருந்தன. 

இதன் ஆரம்ப நிகழ்வை, பொத்துவில் நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் நேற்றுக் காலை ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டு, பொதுமக்களால் மலர் தூவி திலீபனின் உருவப்படத்துக்கு தமது அஞ்சலி செலுத்தப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி, பிரதான வீதி வழியாக திருக்கோவில் நகரை வந்தடைந்தது. அங்கும் பொதுமக்களால் அஞ்சிலி செலுத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தியாக தீபம் திலீபன் தொடர்பான நினைவுப் பேரூரையை  நிகழ்த்தினார்.  இந்த நிகழ்வானது திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. 

இந்த வாகன பேரணியானது, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக  எதிர்வரும் 26ம் திகதி யாழ்ப்பாணம் - நல்லூர் கோவிலில் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .