Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பிரஜைகள் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 11 பேருக்கு உடனடி இடமாற்றம் வழங்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.
பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த டி.56 ரக துப்பாக்கிகள் 2 காணாமல் போன சம்பவம் தொடர்பில், பாணந்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரால், இந்த இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பிரஜைகள் நிலைய பொறுப்பதிகாரி , உப பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் 9 பேர் உள்ளிட்டவர்களுக்கே, இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில், முன்னதாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரபாத் பரணவிதாரணவும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago