Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்த்தப்பட்ட விசா விதிமுறைகள் மற்றும் முதலீட்டுச் சபையின் முதலீட்டு வசதித் திட்டங்கள், முதலீடுகளை மேலும் மேற்கொள்ள துருக்கிய முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.
துருக்கியின் தூதுவர் ரகிபே டிமெட் வெள்ளிக்கிழமை பிரதமரை சந்தித்தார். நீண்டகால குடியிருப்பு விசாவைப் பெறுவதில் துருக்கிய வர்த்தகர்கள் சிலர் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கலந்துரையாடவதற்காக இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த புதிய நடைமுறை முதலீட்டு ஊக்குவிப்பு யோசனை மூலம் முதலீட்டாளர்களை அதிகளவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்பு கிட்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை தமது நாடு ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் இரண்டு மருத்துவ உதவிப்பொருட்கள் அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருப்பதாகவும் துருக்கிய தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார். (a)
29 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
5 hours ago
6 hours ago