2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தேங்காய் விவகாரம்: தகவல் வெளியானது

Freelancer   / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறுமை காரணமாக மாணவர் ஒருவர், மதிய உணவுக்கு தேங்காய் துண்டுகளை உட்கொண்ட சம்பவம் ஆதாரமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்தவொரு குழந்தைக்கோ அல்லது குடும்பத்துக்கோ உதவ ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 0114354647 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், தரம்-9 இல் கல்வி பயிலும் மாணவ தலைவியொருவர், பகலுணவாக தேங்காய் துண்டுகளைக் கொண்டுவந்து உட்கொண்டதாக செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X