2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தாஜூதீன் வழக்கு: அநுர, பெரேராவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2017 ஜனவரி 06 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதிபொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகிய இருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜயராம் ஸ்ட்டொற்சி கட்டளையிட்டார்.

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன், படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று, அவருடைய வாகனத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணித்ததாக கூறப்படும் நபர் தொடர்பில் தெரியவந்துள்ளது என்று பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் டிலான் பெரேரா, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

அது தொடர்பிலான வாக்குமூலத்தை, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவிடமிருந்து பெற்று, நீதிமன்றத்தில் முன்வைப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் பிரதிசொலிஸிட்டர் ஜெனரல், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .