Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மார்ச் 09 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள தாமரைத் தடாகம் (நெலும் பொகுன) கலையரங்கம் மலசலகூடம் போன்று இருப்பதால் சுற்றுச்சூழல் அழகைக் கெடுப்பதாகவும் இந்தக் கலையரங்குக்குத் தான் முதலில் தீட்டியிருந்த எண்ணக்கருவை ராஜபக்ஷ அரசாங்கம் மாற்றிக் குழப்பிவிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
'தாமரைத் தடாகம் அவலட்சணமாக உள்ளது. இதை சொல்வதையிட்டு நான் மனம் வருந்துகின்றேன். நான் எனது வீட்டை விட்டு வரும்போதேல்லாம் இதைக் காண்கிறேன். இது சுற்றுச்சூழலை கெடுத்துவிட்டது. முதலில் இருந்தத் திட்டம் அழகானது. இப்போது அங்கு மக்கள் போவதில்லை. இங்குள்ள கழிவறைகளும் பாவனைக்குரியதாக இல்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், தனது பதவிக் காலத்தில் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்க எவரும் அனுமதிக்கப்பட்டவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் நடந்த மோசடிகள் மற்றும் ஊழல் காரணமாக நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் இங்கு தெரிவித்தார்.
54 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago
5 hours ago