Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 ஜனவரி 29 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கால்நடைகளின் நலன்பேணும் வகையிலும் தெருநாய்கள் குறித்து ஆராயவும், விசேட குழுவொன்றை அமைக்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுத் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில், அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மாகாண சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளடங்கலாக, குறித்த குழுவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் நலன்பேணும் அமைப்புகளின் கருத்துகளைப் பெற்று, குறித்த குழுவுக்கான பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா கருத்துத் தெரிவிக்கையில்,
“நாடு முழுவதிலும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், பஸ் தரிப்பிடங்கள், பொதுஇடங்கள் ஆகியவற்றுக்கு அருகாமையில் நடமாடும் தெரு நாய்களினால், அன்றாடம் பெரும் அசெளகரியங்களுக்கு பொதுமக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இது குறித்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு முறைப்பாடுகள் தினமும் கிடைத்த வண்ணம் உள்ளன.
குறித்த முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்கும் முகமாகவே, இந்தக் குழு அமைக்கப்படுகின்றது.
அந்தவகையில், நாய்களைத் தெருக்களில் கொண்டு வந்து விடுகின்றவர்களுக்கு சி.சி.டி.வி கமெராக்களின் உதவியோடு, கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்படவுள்ளது” என்றார்.
மேலும், கால்நடைகளின் நலன்பேணும் குழுவுக்கான ஆலோசனைகளை வழங்குமாறும், கால் நடைகளின் நலன் பேணும் அமைப்புக்களிடம், அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago