2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தில்ருக்ஷி இராஜினாமா: ‘திறனற்றதால் விலகினார்’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லஹிரு பொத்முல்ல  

“இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான  ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, தனது பதவியை இராஜினாமாச் செய்தமையானது, மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்கே ஆகும்” என்று ஜாதிக ஹெல உறுமய, நேற்றுத் திங்கட்கிழமை (17) தெரிவித்துள்ளது.  

குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு ஆகியவற்றால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தாமதமாகின்றமை தொடர்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் ஜாதிக ஹெல உறுமய, அரசியல் செயற்பாட்டுகளுக்காக, தான் திறனற்றவர் என்பதை காண்பிக்கும் முகமாகவே, தனது பதவியை இராஜினாமா செய்தார் என்று குற்றஞ்சாட்டியது.  

“அவர், அரசாங்கத்தின் உயரதிகாரிகளின் சிநேகிதியாவார். மத்திய வங்கியின் பிணைமுறிப் பத்திரங்களில் நடைபெற்ற ஊழல் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை வெளியானவுடன், யார் உண்மையான குற்றவாளி என்பதை அனைவரும் அறிந்துக்கொள்வர்.  

இது தொடர்பில், இலஞ்ச, ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு பற்றி குறிப்பிடப்பட்டவுடன், தனக்கு பிரச்சினைகள் வரும் என்பதை அறிந்துக்கொண்டே, அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்” என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X