Freelancer / 2025 ஜூன் 28 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடலில் விபத்துக்குள்ளான இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து மீனவர்களை மீட்பதற்காக பெல் 412 ஹெலிகொப்டரை பயன்படுத்துமாறு விமானப்படைக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று மாலை (27) தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட மீன்பிடி படகும், மொரகல்ல பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகும் ஒரு வணிகக் கப்பலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகில் 5 மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகின்றது. விபத்தில் சிக்கியவர்களில் ஒரு மீனவர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், ஏனைய நால்வரும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கடற்படைக்கு தகவல் அளித்த பின்னர், காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக விசேட படகொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதோடு, காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடும் பணியை மேலும் பல மீன்பிடி படகுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் என்றும் கூறப்படுகிறது.
இந்த விபத்து கரையிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. R
4 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago