Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 27 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாயில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துர மதூஷுடன் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் இருவர், நாடு கடத்தப்பட்டனர்.
பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா, சிறைச்சாலைகள் பாதுகாவலர் லலித் குமார ஆகியோரே, இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர். அவ்விருவரும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இன்று கைதுசெய்யப்பட்டனர்.
அவ்விருவரிடமும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டனர். பல மணிநேர விசாரணைக்குப் பின்னர் நதீமால் பெரேரா, நேற்றுமாலை விடுதலை செய்யப்பட்டார். சிறைச்சாலைகள் பாதுகாவலர் லலித் குமாரவை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, அவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
“இவ்விருவரும், ப்ளய் டுபாய் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான எப்.இசட். 547 என்ற விமானம் மூலம் நேற்றுக் காலை 6.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
4 minute ago
11 minute ago
16 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
16 minute ago
26 minute ago