Janu / 2026 பெப்ரவரி 15 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவிலிருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு, நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
சுமார் இரண்டு தினங்களுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து 144 புறாக்கள் கடல் மார்க்கமாக நெடுந்தீவுக்கு கடத்தி வரப்பட்டிருந்தன. வௌ்ளிக்கிழமை ((13) அன்று முதற்கட்டமாக 44 புறாக்களை குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது, கடற்படையினர் மூவரைக் கைது செய்து ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், எஞ்சிய நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை உறுதியானது. நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புறாக்களை மீட்பதற்காக பொலிஸார் சென்றதை அறிந்த வீட்டின் உரிமையாளர்கள் புறாக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது சுமார் 50 இற்கும் மேற்பட்ட புறாக்கள் தீயில் கருகி உயிரிழந்தும், காயங்களுடன் துடிதுடித்துக் கொண்டும் இருந்துள்ளன. எஞ்சிய புறாக்களையாவது காப்பாற்றும் நோக்கில் பொலிஸார் உடனடியாக கூண்டைத் திறந்து விட்டுள்ளனர். இதன் மூலம் ஏனைய புறாக்கள் பறந்து சென்று உயிர் தப்பின.
இந்தக் கொடூர செயல் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, தப்பியோடிய வீட்டின் உரிமையாளர்களைத் தேடி வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago