2025 ஜூலை 09, புதன்கிழமை

நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்

Editorial   / 2018 நவம்பர் 15 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

விமல் வீரவன்ஸ, தினேஸ் குணவர்தன, கயந்த கருணாதிலக, லக்ஸ்மன் கிரியெல்ல, ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அநுரகுமார திசாநாயக்க மற்றும் விஜித ஹேரத்  உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடனேயே சபாநாயகர்  இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் சபையில் ஏற்பட்ட குழப்ப நிலையால், சபை அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் சபையில் இருந்து வெ ளியேறிய சபாநாயகர் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்காத நிலையில், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சபைக்குள் இருக்கின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .