2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

நாயை காரில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற டாக்டர்

Editorial   / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டாக்டர் ஒருவரை தெரு நாயின் கழுத்தில் கயிற்றை கட்டி, அதன் நுனியை காரின் பக்க கண்ணாடி​ ஒன்றில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 37 வயதான டாக்டரின் வீடு அமைந்திருக்கும் பகுதியில்  சில மாதங்களாக தெரு நாயொன்று உலவி வந்துள்ளது.  நாயால் யாருக்கும் எந்தவித தொந்தரவும் இல்லை.யாராவது மீத உணவை வைத்தால் அதை சாப்பிடுவதை அந்த நாய் வழக்கமாக கொண்டிருக்கிறது.

  இந்த நாயை பார்த்தாலே டாக்டருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பணிக்கு சென்று வரும் போது, அந்த நாயை அவர் கல்லால் அடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். நகராட்சியை தொடர்பு கொண்டு அந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கூறியிருக்கிறார்.   அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் தெரு நாயை பிடிக்க முயற்சித்தனர்.  “ஏன் அந்த நாயை பிடித்து செல்கிறீர்கள். நாயால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. மேலும் இந்தப் பகுதிக்கு அது பாதுகாப்பாக இருக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதனால் அந்த நாயின் மீது கோபத்தில் இருந்த டாக்டர், அதனை அங்கிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டார். அதன்படி, காலையில் பணிக்கு செல்லும் போது அந்த நாயை தனது காரின் முன் கண்ணாடியில் பெரிய கயிறை கொண்டு கட்டினார். பின்னர் அவர் காரை ஓட்டிச் சென்றார்.  அந்த நாய் காரின் பின்னால் ஓடியது.  காரின் வேகம் அதிகரித்ததால் அந்த நாயால் ஓட முடியவில்லை.  சில கிலோமீட்டர் தூரம்  அந்த நாய் இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் ஓட முடியாமல் காரின் பின்னால் அந்த நாய் பரிதாபமாக ஓடியது.

இந்நிலையில், காரின் பின்னால் சென்ற வாகன ஓட்டி ஒருவர், இந்த காட்சியை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர், அந்த காரின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி டாக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பொதுமக்களும் குழுமிவிட்டனர். அதன்பின்னர், பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X